பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்: திருமா

சென்னை: ''விமர்சனம் செய்ய வேண்டும் என்பது, பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் செயல் திட்டம். மக்களுக்காக பேசுவதை விட, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசி வருகிறார்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்தார்.
அவர் அளித்த பேட்டி:
எங்களை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது, பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் செயல் திட்டம். மக்களை சந்திக்கும் அவர், மக்களுக்கான கோரிக்கைகளை குறித்து பேசுவதை விட, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது அல்லது விமர்சிப்பது என்ற வகையில் செயல்படுகிறார். அவராக இதை பேசவில்லை. யாரோ அவரை பேச வைக்கின்றனர். அவர் என்ன பேச வேண்டும் என எழுதியும் கொடுக்கின்றனர்.
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், 10 நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது கவலை அளிக்கிறது. காவல் துறை விரைந்து செயல்பட வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு நியமிக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து, தண்டிக்கப்பட வேண்டும்.
இதே போல, தமிழகம் முழுக்க நிறைய அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதெல்லாமே காவல் துறையினரின் செயல்பாட்டில் உள்ள கவனக்குறைவே காரணம் என்றால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை