8 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசால் பாதிப்பு?

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, 600 கோடி ரூபாய் கல்வி கட்டணத்தை, தமிழக அரசு செலுத்தவில்லை, இதனால், 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று, இந்த சட்டத்தின்கீழ் சேர்ந்த ஏழை மாணவர்களிடம், தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. கல்விக்காக வழங்கப்படும் நிதியை எந்தவொரு நெருக்கடியான காலகட்டத்திலும் நிறுத்தி வைக்கக்கூடாது.


மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நிதியை பெறுவதில் தோல்வி அடைந்த தி.மு.க., அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து, மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,

Advertisement