முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சர்ச்சை எதுவும் இல்லை. தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே புள்ளியில், தேசிய ஜனநாயக கூட்டணியாக இணைந்துள்ளோம்.

தி.மு.க.,வை அகற்ற வேண்டும் என்பதே நோக்கம். 2026 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என்பதை அறிவித்து விட்டோம். இதில், எந்த குழப்பமும் இல்லை.

ஆனால், காமராஜரை விமர்சனம் செய்ததால், தி.மு.க., கூட்டணியில் இருக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் காங்கிரஸ் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கம்யூ., கட்சியும், தி.மு.க., அரசை விமர்சிக்கிறது.

- அண்ணாமலை,

முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement