மாணவியர் பாதுகாப்பில் அரசு அலட்சியம்: பா.ஜ., கோபம்
சென்னை : மாணவியர் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் உள்ள, 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 46 கல்லுாரிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்கும் 'உள்ளக புகார் குழு'க்கள் அமைக்கப்படவில்லை. அதிலும், தங்கள் கல்லுாரிகளில் உள்ளக புகார் குழு இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிவிக்க கூட, 113 அரசு கல்லுாரிகள் அலட்சியம் காட்டியுள்ளன.
அனைத்து நிறுவனங்களிலும், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு பெறும் உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்று, விதி உள்ள போதும், அதை அமைக்காமல் இருப்பது, தி.மு.க., அரசுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. குற்றங்களே நடக்கவில்லை என்று கணக்கு காட்டுவதற்காக, கல்லுாரிகளில் உள்ளக புகார் குழுக்களையே அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று, விளம்பரங்களில் முழங்குவது உண்மையானால், அனைத்து அரசு கல்லுாரிகளிலும் பாலியல் புகார் குழுக்களை, முதல்வர் ஸ்டாலின் அரசு உடனே அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
-
தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரிங்ரோடு பாலம் பணி மந்தகதியால் வாகன ஓட்டிகள் அவதி