காமராஜரை இழிவுபடுத்திய தி.மு.க.,வுக்கு கண்டனம்

பல்லடம் : தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலர் ஈஸ்வரன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஹிந்து மதம் மற்றும் ஆன்மிகம் குறித்தும், அரசியல் தலைவர்கள், பெண்கள், பொதுமக்கள் குறித்தும் தி.மு.க.,வினர் இழிவாக பேசியதை மக்கள் மறக்க மாட்டர்.

தற்போது, முதுபெரும் அரசியல் தலைவரான காமராஜர் குறித்து, தி.மு.க.,- எம்.பி., திருச்சி சிவா, இழிவாக பேசியுள்ளார். அது கண்டனத்துக்கு உரியது.

தனக்கென, 10 ரூபாய் கூட சேர்க்காமல் வாழ்ந்த காமராஜர், அணைகள், நீர்த்திட்டங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உட்பட மக்கள் நலனுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தவர்.

இதுவரை, ஏழு முறை தமிழகத்தை ஆண்ட தி.மு.க.,வால், ஒரே ஒரு அணையையும், எந்த ஒரு நீர் திட்டங்களையும் கொண்டு வர முடியவில்லை.

காமராஜர் கட்டிய பள்ளி கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில், தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட சமீபத்திய கட்டடங்கள் இடிந்து விழுகின்றன.

இவ்வாறு, பொது நலனுக்காகவே வாழ்ந்த ஒரு நல்ல தலைவரை, சிவா தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.

அவர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், பிறரை இழிவாகப் பேசும் செயலை, தி.மு.க.,வினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement