வணிகர் நல வாரிய தலைவராக வணிகரை நியமிக்குமா அரசு?
சென்னை: தமிழக வணிகர் நல வாரிய தலைவராக, வணிகரையே அரசு நியமிக்குமா என்ற எதிர்பார்ப்பு, வணிகர்களிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மளிகை, ஜவுளி போன்ற தொழில்களில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், 11:50 லட்சம் பேர் ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர். வணிகர்களுக்கு உதவ வணிகர் நல வாரியம் உள்ளது.
திருமண உதவி
இதன் தலைவராக முதல்வர், துணை தலைவராக வணிக வரித்துறை அமைச்சர், அலுவலர் சார்ந்த உறுப்பினர்களாக ஐந்து அதிகாரிகளும், அலுவல் சாரா உறுப்பினர்களாக, 30 வணிகர்களும் உள்ளனர்.
வணிகர் நல வாரியம் சார்பில், வாரியத்தில் உறுப்பினராக இருந்து உயிரிழக்கும் வணிகரின் குடும்பத்துக்கு நிதியுதவி, மருத்துவ உதவி, திருமண உதவி உட்பட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த, 2023 ஜூலை 7ல் நியமிக்கப்பட்ட வணிகர் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்களின், இரு ஆண்டு பதவி காலம் இம்மாதம், 7ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், வணிக நல வாரிய தலைவராக, வணிகரே நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, வணிகர்களிடம் எழுந்து உள்ளது.
இதுகுறித்து, வணிகர்கள் கூறியதாவது:
அரசுக்கு வரி வருவாய் ஈட்டி தருவதில், வணிகர்கள் தான் முதுகெலும்பாக உள்ளனர்.
பல கட்சியினரும், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளும், சிறு கடை என்று கூட பார்க்காமல், நன்கொடை கேட்டு தொல்லை தருகின்றனர். இரவில் கடைகள் செயல்பட அரசு அனுமதித்தாலும், போலீசார் அனுமதிப்பதில்லை.
வணிகர்களின் குறைகளை தெரிவிக்க சென்றால், வணிகர் நல வாரிய தலைவராக உள்ள முதல்வரை சந்திக்க, அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.
வாரிய தலைவராக, பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு முன்னேறிய வணிகர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்காக, வணிகர் சங்கங்களின் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்களை நியமித்து விட கூடாது.
பிரச்னை
வணிக அனுபவம் உள்ள வணிகரை, தலைவராக நியமிக்கும் பட்சத்தில், அவர் மாவட்ட வாரியாக சென்று, வணிகர்களின் குறைகளை கேட்டறிந்து, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.
அதற்கு ஏற்ப புதிய கொள்கைகளை வகுக்கவும், திட்டங்களாக அறிவிக்கவும், அரசுக்கு உதவியாக இருக்கும்.
இதனால், வணிகர்கள் பயன் பெறுவர்; அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். எந்த நேரத்திலும் தலைவரை சந்தித்து, பிரச்னைகளை தெரிவிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
-
தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரிங்ரோடு பாலம் பணி மந்தகதியால் வாகன ஓட்டிகள் அவதி