மாணவர்களின் பெயர் திருத்தம் தேர்வுத்துறை கட்டுப்பாடு
சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் பெயரில் திருத்தம் செய்ய, அரசு தேர்வுகள் இயக்ககம், புதிய கட்டுப்பாடுகளை விதித்துஉள்ளது.
மாணவர்கள், தங்களின் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், தங்களின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் திருத்தம் கோரினால், அவர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், தலைமை ஆசிரியர் சான்றொப்பமிட்ட மாற்று சான்றிதழ், தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், பிறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றை பெற்று, சரி பார்த்து, தேர்வுகள் இயக்ககத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
அவ்வாறு, அசல் சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களை நிராகரித்து, முறைகேடுகளை தவிர்க்க வேண்டும்.
இது குறித்து, 'பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, அரசு தேர்வுகள் இணை இயக்குநர் மகேஷ்வரி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை