பட்டாசு ஆலைகளுடன் கூட்டுறவு சங்கங்கள் பேச்சு 

சென்னை : மக்களுக்கு குறைந்த விலையில் பட்டாசு விற்க, அதிக தள்ளுபடி வழங்குமாறு, பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களின் பிரநிதிகளுடன், கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சு நடத்திஉள்ளனர்.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு பண்டகசாலைகள், சங்கங்கள் ஆகியவை, பல்பொருள் அங்காடி, காய்கறி கடை, மருந்தகம் போன்றவற்றை நடத்துகின்றன.

இவை, தீபாவளி பண்டிகைக்கு தற்காலிகமாக பட்டாசு கடைகளை துவக்குகின்றன.

நாடு முழுதும் அக்., 20ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, கூட்டுறவு நிறுவனங்களுக்கு பட்டாசு கொள்முதல் செய்ய, பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், சென்னையில் நேற்று முன்தினம் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பட்டாசுகளுக்கு வழக்கமான தள்ளுபடியுடன், மூன்று விதமான தள்ளுபடிகளை வழங்குவதாக, பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

'மிக குறைந்த விலையில் மக்களுக்கு பட்டாசு கிடைக்க, மொத்த விலைக்கு விற்கப்படும் வகையில், அதிக தள்ளுபடி வழங்குமாறு கேட்கப்பட்டது. இதை ஏற்கும் நிறுவனங்களிடம் பட்டாசுகள் வாங்கப்படும்' என்றார்.

Advertisement