ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுக்கே ஓட்டு: அர்ஜுன் சம்பத்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:

ஹிந்து மக்கள் கட்சி சார்பில் இன்று, திருத்தணி மலையில் இருந்து 'வெல்லும் தமிழகம்' என்ற தலைப்பில் ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என பிரசார பயணம் மேற்கொள்கிறோம். அரசியல்வாதிகள் ஹிந்துக்களை கிள்ளு கீரைகளாக நினைக்கின்றனர்.

ஹிந்துக்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு யாரும் இல்லை. ஹிந்து எனக் கூறினாலே மதவாதம் என்கின்றனர்.

மதுரையைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் குறிப்பிட்டு முழுக்க முழுக்க மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட ஏற்றுக் கொள்வதற்கு கட்சிகள் தயாராக இல்லை. எனவே, ஹிந்துக்களை வாக்கு வங்கியாக அணி திரட்டுவதற்காக பிரசார பயணத்தை துவக்குகிறோம்.

மாடுகளுக்கு மாநாடு போட்ட நாம் தமிழர் கட்சி சீமான், அந்த மாநாட்டில் பசுவதை தடை சட்டம் பற்றி பேசவில்லை. அதே போல முஸ்லிம் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார்.

ஓட்டுக்காக இரட்டை வேடம் போடுவதை சீமான் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement