தக்காளி, கத்தரிக்காய் பீன்ஸ் வாங்கலையோ!

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சிறுவர், சிறுமிகள் காய்கறி சந்தை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கலைக்கூடம் அமைப்பு சார்பில், ஏற்படுத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு மினி காய்கறி சந்தையில், 10 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பங்கேற்று காய்கறிகளை கூவிக் கூவி விற்பனை செய்தனர்.

இதில் காரட், பீன்ஸ், கத்தரி, உருளைக்கிழங்கு, கொத்தவரங்காய், கீரைகள் என, ஏராளமான காய்கறிகள் இடம் பெற்றன.நடைப்பயிற்சி சென்றவர்கள், குழந்தைகள் நடத்திய காய்கறி சந்தையில் உற்சாகமாக விலைபேசி, காய்கறி வாங்கிச் சென்றனர். கலைக்கூடம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிதா மற்றும் ஜெனிதா கூறுகையில், 'காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் மற்றும் விற்பனை செய்யும் வியாபாரிகளின் சிரமங்களை, குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த விழிப்புணர்வு காய்கறி சந்தையை ஏற்பாடு செய்து இருக்கிறோம்' என்றனர்.

Advertisement