பெயர் மாற்றம் பிரச்னையை உருவாக்கும்; சென்னை பல்கலைக்கு காத்திருக்கும் சிக்கல்

சென்னை பல்கலை, உறுப்புக் கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்' துறை, 'எலக்ட்ரானிக்ஸ் வித் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்' என பெயர் மாற்றப்பட்டு உள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பல்கலை உறுப்புக் கல்லுாரிகளில் செயல்படும் பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சயின்ஸ் என்ற துறை, இனி பி.எஸ்சி., எலக்டரானிக்ஸ் வித் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் என பெயர் மாற்றத்துடன், இந்தாண்டு முதல் செயல்படும்.
கடந்தாண்டு சேர்ந்து, இந்தாண்டு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். இந்த முடிவு, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சயின்ஸ் துறையின் பி.ஓ.எஸ்., எனும் முடிவெடுக்கும் குழு பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த முடிவுக்கு சிண்டிகேட், அகாடமிக், செனட் கூட்டங்களில் ஒப்புதல் பெறப்படும் என்பதால், அனைத்து கல்லுாரிகளும் இந்த பெயர் மாற்றத்தை ஏற்க வேண்டும் என, பதிவாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பல்கலை உறுப்புக் கல்லுாரி முதல்வர்கள் கூறியதாவது:
ஒரு பல்கலை புதிய பாடப்பிரிவு துவங்குவது அல்லது ஏற்கனவே உள்ள பாடப்பிரிவை மாற்றுவது உள்ளிட்டவற்றுக்கு, உரிய கருத்துரு உருவாக்கி, துணை வேந்தர், செனட், அகாடமிக், சிண்டிகேட் குழு கூட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும்.
அப்போது தான், அங்கீகரிக்கப்பட்ட பாடமாக பல்கலை மானியக்குழு ஏற்கும். ஆனால், துணைவேந்தர் இல்லாத நிலையில், சிண்டிகேட் கூட்டமும் பல மாதங்களாக நடக்காத நிலையில், பாடப்பிரிவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஒருவேளை, சிண்டிகேட் இந்த முடிவை நிராகரித்தால், இதில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள், அரசு பணிக்கு நிராகரிக்கும் நிலை உருவாகும். இதனால், மாணவர்களின் எதிர்காலம் பிரச்னைக்கு உரியதாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை