காமராஜர் பிறந்த நாள்

வேப்பூர் : விருத்தாசலம் ரோட்டரி கிளப் சார்பில் நல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.

ரோட்டரி கிளப் தலைவர் அன்புக்குமரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள் குமார், விருத்தகிரி, முத்து கோவிந்தராஜன், உதவி ஆளுனர் அசோக்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் அருண்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு காமராஜர் குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement