போலீஸ் டைரி

நகை பறித்த வாலிபர் கைது



மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ராமாத்தாள், 65. இவர் கடந்த, 17ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட வாலிபர் திடீரென வீட்டுக்குள் புகுந்து, மூதாட்டி அணிந்திருந்த, 3 சவரன் நகையை பறித்து சென்றார்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வீரபாண்டி போலீசார் ஆய்வு செய்தார். அதே பகுதியில் வசித்து வரும் சிவகங்கையை சேர்ந்த பாலமுருகன், 30 மூதாட்டியின் நகையை பறித்தது தெரிந்தது. அவரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

விபத்தில் ஒருவர் பலி



இச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 40. பைக்கில், சாமளாபுரத்திலிருந்து இச்சிப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். லிட்ரசி மிஷன் பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். திருப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement