ஆடிப்பூர தேர் திருவிழா துவக்கம்

வில்லியனுார் : வில்லியனுாரில் பிரசித்திபெற்ற கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்ஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து 12 நாட்களுக்கு தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடக்கிறது.

முக்கிய விழாவாக வரும் 27ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 8:15 மணி அளவில் முதல்வர் ரங்கசாமி தலைமையில், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, சப் கலெக்டர் குமரன் ஆகியோர் பங்கேற்றுதேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.

28ம் தேதி காலை தீர்த்தவாரி மற்றும் வளையல் உற்சவம், இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா, 29ம் தேதி இரவு 7:30 மணியளவில் தெப்ப உற்சவம், 30ம் தேதி மாலை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன் மற்றும் உற்சவதாரர்கள் செய்கின்றனர்.

Advertisement