குழந்தைகள் திரைப்பட விழா

புதுச்சேரி : புதுவை அறிவியல் இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் சார்பில், 13 முதல் 18 வயதுக்குட்ட சிறுவர்களுக்கான 2 நாள் குழந்தைகள் திரைப்பட தொடக்க விழா சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையான்ஸ் பிரான்சிஸ் அரங்கத்தில் நேற்று நடந்தது.

திரைப்பட விழாவினைதகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் முத்தம்மா, தகவல் மற்றும் விளம்பரத்துறை செயலாளர் முகமது அஹ்சன் அபித் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் இந்தி மொழிகளில் உள்ள குழந்தைகளுக்கான 15 படங்கள் திரையிடப்பட்டன.

இந்த திரைப்பட விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு திரைப்படங்களை கண்டுகளித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி அலையான்ஸ் பிரான்சிஸ் தலைவர் நல்லாம் சதீஷ், அறிவியல் இயக்க துணை தலைவர் ஹேமாவதி, ஒருங்கிணைப்பாளர் முருகவேல், இயக்க தலைவர் மதிவாணன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இன்றுகாலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 15 பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

Advertisement