6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும்

சென்னை: 'வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக, சென்னை கொரட்டூரில், 10 செ.மீ., துரைப்பாக்கம், கண்ணகி நகர், ஈஞ்சம்பாக்கத்தில் தலா 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
இது தவிர, ராணிப்பேட்டை, நாமக்கல், திருநெல்வேலி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
தென் மாநில பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ஏற்படுவதால், நேற்றும் மாலையில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் மழை பெய்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
@twitter@https://x.com/dinamalarweb/status/1946731367670358229twitter
குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில், கன மழை பெய்யும். தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளிலும் மழை பெய்யும். வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
‛‛பாக்., உடன் விளையாட முடியாது''; இந்திய லெஜண்ட்ஸ் வீரர்களின் உறுதியால் ரத்தான கிரிக்கெட் போட்டி
-
பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை தொடங்கியது சீனா!
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்