ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு

கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷனில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் ஆய்வு மேற்கொண்டார்.சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ள பகுதிகளில் தண்டவாளங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பல்வேறு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் இருந்தனர்.

Advertisement