கலை இலக்கிய போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்

திருப்பூர் : திருப்பூர் குளத்துப்பாளையத்தில் உள்ள வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் தண்ட பாணியின், 26ம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு, மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையிலான, 7ம் ஆண்டு கலை இலக்கிய போட்டி நடந்தது.
மாவட்டத்தின், 30க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளி களிலிருந்து, ஆயிரத்து, 500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பள்ளி துணை தாளாளர் தரணீ தரன் வரவேற்றார்.
தாளாளர் கனகரத்தினம் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சிவகுருநாதன், முன்னாள் ஆசிரியை மணிமேகலை வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளி முதல்வர் தனபாக்கியம், துணை தாளாளர் சுபாஷ், நிர்வாக உறுப்பினர் தீபலட்சுமி மற்றும் கொங்கு நகர் பள்ளி முதல்வர் ரமேஷ் பரிசுகளை வழங்கினர். பள்ளி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.
மேலும், 2025ம் ஆண்டுக்கான தண்டபாணி சுழற் கோப்பையை பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா தட்டி சென்றது. செட்டிபாளையம் ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா, அம்மாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மற்றும் பிரண்ட்லைன் அகாடமி இரண்டாமிடம் பெற்றது.
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை