பொதுப்பணி, நீர்வளத்துறைகளில் பாரபட்சமான பதவி உயர்வு
மதுரை: பொறியாளர்களை மட்டும் பிரித்து பொதுப்பணித்துறை, நீர்வளத்துறைகளாக்கிய நிலையில் நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் 18 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி தவிக்கின்றனர்.
உலக வங்கி நிதியுதவி பெறும் வகையில் 2000ம் ஆண்டில் பொறியாளர்களின் எண்ணிக்கையை காட்டுவதற்காக பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை பிரிக்கப்பட்டது. 2007 பேட்ச் உதவி பொறியாளர்கள் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை என்ற தனித்துறைகளின் கீழ் சேர்ந்தனர்.
தற்போது வரை அமைச்சுப்பணியாளர்கள் தனித்துறைகளாக பிரிக்கப்படவில்லை. பொதுப்பணித்துறையில் 2007 ல் உதவி பொறியாளர்களாக சேர்ந்தவர்கள் இரண்டு கட்ட பதவி உயர்வுடன் தற்போது செயற்பொறியாளர்களாக (இ.இ.) உள்ளனர்.
நீர்வளத்துறையின் 100 உதவி பொறியாளர்கள் 18 ஆண்டுகளாக அடுத்த நிலை உதவி செயற்பொறியாளர் பணி கூட கிடைக்காமல் சிரமப்பட்டனர். 2025 ஜனவரியில் 60 பேருக்கு உதவிசெயற்பொறியாளர் பதவி உயர்வு கிடைத்தது. பணியிடம் காலியாக இருந்தும் மீதியுள்ளோருக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என்கின்றனர் தமிழ்நாடு பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கத்தினர்.
அவர்கள் கூறியதாவது:
எங்களுக்கான சங்கம் ஒன்றாக உள்ளது. பிரிக்கப்படாத அமைச்சு பணியாளர்களுக்கு முறையான பதவி உயர்வு வழங்கப்படுகிறது. டிப்ளமோ முடித்த ஜூனியர் பொறியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது அனைவருமே பொறியியல் பட்டதாரிகள் தான் என்பதால் அந்த ரிசர்வேஷன் முறையை கைவிட வேண்டும். 30 பணியிடங்கள் காலியாக உள்ளதால் அவற்றில் 2007 பேட்ச் உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உலகவங்கியிடம் இருந்து நிதி பெறுவதற்காக துறைகள் பிரிக்கப்பட்டன. தற்போது உலகவங்கி நிதி குறைந்து விட்டதால் இரு துறைகளையும் இணைத்து சீனியாரிட்டி அடிப்படையில் எங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை