விருதுகளால் சாதிக்கும் சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி

புவனகிரி ஒன்றியம், சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கடந்த 1966ம் ஆண்டு துவங்கப்பட்டது. தனியார் பள்ளிக்கு நிகராக 'ஏசி' வசதியுடன் கூடிய வகுப்பறை உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் பிள்ளைகள் படிக்கின்றனர்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், பேசவும் பயிற்சி அளிப்பதுடன் திருக்குறள் படிக்க ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். மாணவர்கள் கலைத்திறன்களில் சிறந்து விளங்குவதை கண்டு நன்கொடையாளர்கள் பள்ளிக்கு தேவையான வசதிகளை முன்வந்து செய்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் ஆர்.பி.எஸ்.கே., திட்டம் சார்பில் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி, எடை குறைவு, ரத்த சோகை உள்ளிட்டவற்றை சரி செய்யும் வகையில் பெற்றோர் தினசரி ஒரு பழம் மற்றும் மதிய உணவிற்கு காய்கறி அல்லது கீரை கொண்டு வர வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
பள்ளி வளாகம், வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பிற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், நடைமுறைப்படுத்த தயார் நிலையில் உள்ளது.
மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வீட்டில் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டு 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கி கண்காணிக்கப்படுகிறது.
மத்திய அரசின் கிராம குழு எழுத்தறிவுத் திட்டம் சார்பில் முதியோர் கல்வியை நிறைவேற்றியதால் கடந்த 2023ம் ஆண்டு திருச்சியில் நடந்த அரசு விழாவில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் அருணாச்சலத்தை பாராட்டி விருது வழங்கி கவுரவித்தனர்.
கடந்தாண்டு சிறந்த பள்ளிக்கான மேலாண்மை குழு விருதை அப்போதைய கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். மாநிலம், மாவட்ட அளவில் முதன்மை மற்றும் எழுத்தறிவு விருதும் இப்பள்ளி பெற்றுள்ளது. பெங்களூரு சிவசக்தி அறக்கட்டளை மற்றும் சிதம்பரம் தொழிலதிபர் சண்முகசுந்தரம் ஆகியோர் பல லட்சம் செலவில் அடிப்படை வசதிகள், பழுதடைந்த பள்ளி கட்டடத்தை சரி செய்து, தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கினர்.
பெற்றோர் சார்பில் கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியானது கிராமங்களில் கல்வி மற்றும் கலைக்கோவிலாக திகழ்கிறது.
'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது பெற்றது பெருமை
தலைமை ஆசிரியர் அருணாச்சலம் கூறிய தாவது:
இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக கடந்த 2019ம் ஆண்டில் பணி மாறுதலில் வந்தேன். மாணவர்களின் திறமையை கண்டு வியந்து பல்வேறு அடிப்படை வசதிகளை நண்பர்கள் மூலம் செய்து வருகிறேன். 'தினமலர்' நாளிதழ் லட்சிய ஆசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பள்ளி நிகழ்வுகளை அவ்வப்போது சமூக வலைத் தளங்களில் பதிவு செய்கிறோம். ஊராட்சி நிர்வாகம் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைத்துள்ளது.
பள்ளி நுாலகத்தில் ஆயிரம் புத்தகங்கள் சேமித்துள்ளோம். துவக்கம், நடுநிலைப்பள்ளி மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன்.
மேலும்
-
டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்; மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த ஆலோசனை
-
கொட்டுகிறது கனமழை; நடுவட்டத்தில் 96 மி.மீ., பதிவு
-
‛‛பாக்., உடன் விளையாட முடியாது''; இந்திய லெஜண்ட்ஸ் வீரர்களின் உறுதியால் ரத்தான கிரிக்கெட் போட்டி
-
பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை தொடங்கியது சீனா!
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!