தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரிங்ரோடு பாலம் பணி மந்தகதியால் வாகன ஓட்டிகள் அவதி
ஓசூர்: ஓசூர் அருகே, பேரண்டப்பள்ளியில், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே, சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு மேம்பால பணிகள் மந்தகதியில் நடப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்
படுகின்றனர்.
கர்நாடகா மற்றும் தமிழக எல்லையை இணைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், இரு மாநிலங்களுக்கு இடையே சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு அமைக்கப்படுகிறது. தமிழக எல்லையிலுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து, 45 கி.மீ., துாரம்
இச்சாலை செல்கிறது.
இதற்காக, 300 ஹெக்டேருக்கு மேல், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
கர்நாடகாவில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 6 கோடி ரூபாய் வரையும், தமிழகத்தில், 10 லட்சம் ரூபாயும் கொடுப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டினர். சாட்டிலைட் டவுன் ரோட்டில் சில இடங்களில் மட்டுமே சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியது.
அதனால், விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை உருவானது. இதையடுத்து, நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, முன்னாள் எம்.பி.,க்கள் நரசிம்மன்,செல்லக்குமார் உட்பட பலரிடம் முறையிட்டனர். அவர்களின் அழுத்தம் காரணமாக, 45 கி.மீ., துாரமும் சர்வீஸ் சாலை அமைக்க, மத்திய அரசு அறிவித்தது. சாட்டிலைட் டவுன் ரோடு, பேரண்டப்பள்ளி அருகே, கிருஷ்ணகிரி -
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதால், சாலை குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
பணி பல மாதமாக மந்தகதியில் பணி நடப்பதால், பேரண்டப்பள்ளியில் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அப்பகுதியில் அடிக்கடி வாகன போக்குவரத்து ஏற்பட்டு, நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்து, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பேசி, பால பணிகளை விரைந்து முடிக்கவும், சர்வீஸ் சாலை பணிகளையும் விரைந்து முடிக்கவும், வாகன
ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பசுபிக் கடலில் நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு: ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை
-
யார் போராடினாலும் வாழ்த்துவோம்: அன்புமணி போராட்டம் குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில்
-
கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து; ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
-
கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு; மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை
-
குஜராத்தில் சோகம்; குழந்தைகள் 3 பேரை கொன்று பெற்றோர் தற்கொலை!
-
20 ஆண்டுகள் கோமாவில் இருந்த 36 வயது சவுதி இளவரசர் காலமானார்!