அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை

1

ஆத்துார்: மின்விளக்கு எரியாததால் கும்மிருட்டில், அரசு பஸ்சில் பயணியர் அவஸ்தையுடன் பயணித்தனர்.

விழுப்புரம் கோட்டம், சிதம்பரம் கிளை பணிமனை அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு, சிதம்பரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு, 11:00 மணிக்கு சேலம் மாவட்டம், ஆத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்றபோது, 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். ஆனால், பஸ்சில், மின் விளக்கு பழுதாகி எரியவில்லை.

மின்விளக்கை எரிய வைக்க, சிறிது நேரம் டிரைவர் முயற்சி செய்தும் பலனில்லை. பின், கண்டக்டரிடம் தெரிவித்து விட்டு, பஸ்சை இயக்கினார். இதனால் கண்டக்டரும், டிக்கெட் தருவதில் சிரமப்பட்டார்.

விளக்கு எரியாததால், பயணியர் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரைவர், கண்டக்டர், 'சேலம் சென்றதும் மின்விளக்கு சரிசெய்யப்படும்' என்றனர். இருளில் பயணியர், சேலம் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement