அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!

15


கரூர்: குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் ஸ்ருதி(27) என்ற உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.



இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement