டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்; மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த ஆலோசனை

புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை 21) தொடங்கி, அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், கூட்டத் தொடர் முழுவதும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத் தொடரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்துார், பீஹார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பணமூட்டை சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவகாரமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூலை 20) டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
மத்திய அமைச்சர்கள் நட்டா, அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் எம்.பி., ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும்
-
இ.பி.எஸ்., பேச்சில் உள்நோக்கமா; நயினார் நாகேந்திரன் பதில்
-
15 மாத கால தாமதம்; ஜூலை 22ம் தேதி இந்திய ராணுவத்திடம் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு
-
அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பா.ம.க.,விலிருந்து சஸ்பெண்ட்: ராமதாஸ்
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்!
-
சமூகநீதி பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: அன்புமணி
-
பசுபிக் கடலில் நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு: ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை