கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு; மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை

20


மதுரை: கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த மே மாதம், தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில், சென்னை அருகே காட்டாங்கொளத்துாரில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மதுரை ஆதினம் காரில் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, அஜீஸ் நகர் சர்வீஸ் சாலை வழியாக ரவுண்டானாவை கார் கடந்தபோது, பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.



இதில், துாங்கிக்கொண்டிருந்த ஆதினம் எவ்வித காயமும் இன்றி தப்பினார். தன்னை கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என, அவர் சந்தேகம் தெரிவித்தார். மதுரை ஆதினம் பொய்யான தகவலை பரப்பியதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, ஆதினத்திற்கு எதிராக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இது தொடர்பாக, இன்று (ஜூலை 20) தொடர்பாக, படுத்த படுக்கையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முன்னதாக ஆதினத்திடம் விசாரணை நடத்துவதற்கு, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரை மடத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் பா.ஜ., வினர் மறித்தனர். மதுரை ஆதினம் விசாரணையின் போது உதவியாளர் தேவை என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த போலீசார், ஆதினத்திடம் விசாரணை நடத்தினர்.

Advertisement