கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து; ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



அவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement