சிவகங்கையில் விவசாயி கொடூர கொலை: தலையை தேடும் போலீஸ்: மர்ம நபர்கள் வெறிச்செயல்

2


சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமத்தில் சோணை முத்து என்ற விவசாயியை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொலை செய்தனர். தலை மற்றும் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சோணைமுத்து(60). விவசாயி. தற்போது மதுரையில் வசித்து வருகிறார். சொந்த கிராமத்தில் உள்ள தனது நிலத்தை பார்வையிட சோணைமுத்து வந்துள்ளார்.


அங்கு வந்த மர்ம நபர்கள், சோணைமுத்துவை தலையை துண்டித்து கொலை செய்தனர். மேலும் தலையை கொண்டு சென்றுவிட்டனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சோணைமுத்துவின் தலையையும், கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement