சட்டசபையில் ரம்மி விளையாட்டு: அஜித் பவார் கட்சி அமைச்சரால் சர்ச்சை

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை கூட்டத் தொடரின் போது வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, தனது செல்போனில் ரம்மி விளையாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மாணிக்ராவ் கோக்டே. இவர் சட்டசபை தொடரின் போது தனது செல்போனில் ரம்மி விளையாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் பேரன் ரோகித் பவார் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவோடு அவர் விடுத்துள்ள பதிவு :
எண்ணற்ற விவசாயிகளின் பிரச்னைகள் உள்ளது. தினமும் மாநிலத்தில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்படியிருக்கையில், வேளாண் அமைச்சருக்கு வேறு எந்த வேலையும் இல்லாததால், ரம்மி விளையாடும் நேரம் கிடைத்துள்ளது. பகிர் காப்பீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் அவலக்குரலை இந்த அமைச்சர்களும், அரசும் கேட்குமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே, தன்னுடைய செல்போனில் யாரோ தவறுதலாக இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்து விட்டதாகவும், அதனை நீக்கம் செய்ய முயலும் போது, அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டதாக அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே விளக்கம் கொடுத்துள்ளார். முழு வீடியோ வெளியே வந்தால் உண்மை தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

Advertisement