விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடும் மேற்கத்திய ஊடகங்கள்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடில்லி: ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். யூகங்களை கிளப்பிய ஊடகங்களை கடுமையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட விரும்பும் செய்திகளுக்கு உள்நோக்கம் இருக்கலாம்.விமான விபத்து புலனாய்வுப் பணியகம், விசாரணை முடியும் வரை பொறுமையுடன் இருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளது. நான் அவர்களை நம்புகிறேன்.
எனவே யூகங்களை தவிர்க்கும் படி மேற்கத்திய ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன். முழு கருப்புப் பெட்டியையும் டிகோட் செய்வதிலும், இந்தியாவிலேயே தரவை ஆய்வு செய்வதிலும் விமான விபத்து புலனாய்வு பணியகம் அற்புதமான வேலையைச் செய்துள்ளனர்.
இதுவே முதல் முறை
இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால் முந்தைய சம்பவங்களில், கருப்புப் பெட்டி சேதம் அடைந்ததாகக் காணப்பட்ட போதெல்லாம், தரவுகளை மீட்டெடுக்க அது எப்போதும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஏர் இந்தியா விமான விபத்தில், விமான விபத்து புலனாய்வு பணியகம் அனைத்தையும் வெற்றிகரமாக டிகோட் செய்திருப்பது இதுவே முதல் முறை.
தரவு இங்கே உள்ளது. முதற்கட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது. இறுதி அறிக்கை வரும் வரை எந்தக் கருத்தையும் தெரிவிப்பது, யாருடைய சார்பாகவும் ஒரு நல்லதாக இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். முதற்கட்ட அறிக்கையை முழுமையாகப் படித்து வருகிறோம்.
இறுதி அறிக்கை
மேலும் பாதுகாப்பு வசதிகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். சம்பவம் மற்றும் விசாரணையைப் பொறுத்த வரை, நாங்கள் எதையும் சொல்வதற்கு முன் இறுதி அறிக்கைக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.



மேலும்
-
தென்கொரியாவில் வெளுத்து வாங்கும் கனமழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு
-
பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
-
லண்டன் இஸ்கான் உணவகத்தில் அசைவ உணவை சாப்பிட்ட நபர்; அதிர்ச்சி சம்பவம்
-
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால்...: புடின் சொல்ல வருவது என்ன?
-
அதெல்லாம் ராணுவ ரகசியம்: சீமான் பேட்டி
-
அவதுாறு பரப்பும் அமைச்சர் நேரு; இ.பி.எஸ்., பதிலடி