பீஹாரில் எனது தந்தை தான் மீண்டும் முதல்வர்: நிதிஷ் மகன் நிஷாந்த்

பாட்னா: என் தந்தை ம்ண்டும் பீஹார் முதல்வர் ஆவார், இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பீஹார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் சுழன்று வருகின்றன.
எப்படியும் ஆட்சியில் மீண்டும் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ்குமார் உறுதியாக உள்ளார். அதற்காக பல்வேறு சலுகைகளுடன் புதுப்புது அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
இந் நிலையில், பாட்னாவில் நிதிஷ்குமார் மகன், நிஷாந்த் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;
என் தந்தை மீண்டும் முதல்வராக வருவார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். நாங்கள் வலுவான பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்த பணிகளுக்கு அவர்கள் நிச்சயமாக அவருக்கு வெகுமதி அளிப்பார்கள்.
மேலும் அவர் மீண்டும் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற உதவுவார்கள் என்று மாநில மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பொது மக்களிடம் முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
-
லண்டன் இஸ்கான் உணவகத்தில் அசைவ உணவை சாப்பிட்ட நபர்; அதிர்ச்சி சம்பவம்
-
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால்...: புடின் சொல்ல வருவது என்ன?
-
அதெல்லாம் ராணுவ ரகசியம்: சீமான் பேட்டி
-
அவதுாறு பரப்பும் அமைச்சர் நேரு; இ.பி.எஸ்., பதிலடி
-
200 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளி கட்டட மேற்கூரை இடிந்து விபத்து!