ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருப்பிடம் சுற்றி வளைப்பு: கடும் துப்பாக்கிச் சண்டை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள டச்சான் என்ற பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து சீல் வைத்தனர்.


பின்னர் அவர்கள் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.


பயங்கரவாதிகள் இருப்பிடம் தெரிந்துவிட்டதை அடுத்து, கூடுதல் படைகள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Advertisement