பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட பா.ஜ., வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டசிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பா.ஜ., கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூருவில் கடந்த ஜூன் 4ம் தேதி நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்தக் கூட்டநெரிசலுக்கு காரணம் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் பெங்களூரு அணி நிர்வாகத்தின் மீது அம்மாநில அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்தசூழலில் அண்மையில் கூட்டநெரிசல் குறித்து கர்நாடகா அரசு விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. லீசார் அனுமதி மறுத்த நிலையிலும், 'ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு வாருங்கள், இலவச அனுமதி' என்று பெங்களூரு அணி நிர்வாகம், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தது. அதுமட்டுமில்லாமல், அந்த அணியின் நட்சத்திர வீரர் கோலியும், வீடியோ மூலம், ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். இலவச அனுமதி என்று கூறியதால், ஒரே சமயத்தில் 3 லட்சம் பேர் குவிந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கர்நாடகா அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டசிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பா.ஜ., தலைவரும், கர்நாடகா சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அசோகா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் விவாதத்தை எழச் செய்துள்ள இந்த சம்பவம் கர்நாடகா விளையாட்டுக்கு மிகப்பெரிய கரும்புள்ளியாகும். இந்த விஷயத்தில் கர்நாடகா அரசும், போலீசாரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் தவறியதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. அதனடிப்படையில் போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ததன் மூலம் அரசாங்கம் இந்த விஷயத்தை கை கழுவிவிட்டது. இந்த இடைநீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின் போது, மத்திய நிர்வாக தீர்ப்பாயம், போலீஸார் அதிகாரிகளை மட்டுமே பொறுப்பாக்குவது பொருத்தமானதல்ல என்று கருத்து தெரிவித்தது.
சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரையில் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இந்த பிரச்னை குறித்து மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். எந்த விசாரணையில் எந்த அரசியல் தலையீடு இல்லாத வகையில், இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கிறேன். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
-
டில்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து; பயணிகள் கடும் அவதி
-
சசிதரூர் எங்களில் ஒருவர் கிடையாது; காங். தலைவர் திட்டவட்டம்
-
மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காயப் பதவி: அண்ணாமலை
-
அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது : லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
-
ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளம்: மாயமான ரூ.368 கோடி