கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொண்டல் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜா மகன் சிபிராஜ்.20. இவரின் தம்பி பரத்ராஜ்.19., மயிலாடுதுறை கூறை நாட்டைச் சேர்ந்த சங்கர் மகன் அருன்ராஜ்.21. ஆகிய மூவரும் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இன்று மூவரும் கொள்ளிடம் அருகே பனங்காட்டாங்குடி கிராமம் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது மூன்று பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். நீண்ட நேரம் கழித்து அதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரத்ராஜ் என்பவரை காப்பாற்றினர்.
ஆழமான பகுதிக்கு சென்றதால் அருண்ராஜ், சிபிராஜ் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ ஊடத்திற்கு விரைந்து வந்தனர் அதற்குள்ளாக கிராம மக்கள் ஆற்றில் இறங்கி இறந்த அருண் ராஜ், சிபிராஜ் ஆகிய இருவரின் உடல்களை சடலமாக மீட்டனர்.


இது குறித்து கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அனுப்பி வைத்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்று இரு மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement