ராகுலின் முதிர்ச்சியற்ற தன்மை... மார்க்சிஸ்ட் கண்டனம்; இண்டி கூட்டணியில் புகைச்சல்

சென்னை: மார்க்சிஸ்ட் குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிய கருத்துக்கு இடது சாரிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது இந்தப் பேச்சு முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கேரளாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து சித்தாந்த ரீதியாக களத்திலும், கருத்துகளிலும் போராடி வருவதாகவும், அவர்கள் மக்களை பற்றி நினைப்பதில்லை என்று கூறி, இண்டி கூட்டணியில் அவர் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்த்து பேசியதற்காக ராகுலுக்கு கம்யூனிஸ்ட்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்த நிலையில், ராகுலின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை;
மதவெறி பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றை சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, காங்கிரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இண்டி கூட்டணியில் இருந்து ஆம்ஆத்மி கட்சி வெளியேறியது. தற்போதுஇடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புகைச்சல் ஏற்பட்டிருப்பது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.










மேலும்
-
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
-
டில்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து; பயணிகள் கடும் அவதி
-
சசிதரூர் எங்களில் ஒருவர் கிடையாது; காங். தலைவர் திட்டவட்டம்
-
மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காயப் பதவி: அண்ணாமலை
-
அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது : லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
-
ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளம்: மாயமான ரூ.368 கோடி