தகவல் சுரங்கம் : பல்லுயிரினங்களின் மையம்

தகவல் சுரங்கம்


பல்லுயிரினங்களின் மையம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து 400 கி.மீ., துாரத்தில் உள்ளது. இது 8.8 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்தது. பலவகை தாவரங்கள், மரங்கள், உயிரினங்கள் இங்கு வாழ்வதால் இது 'பல்லுயிரினங்களின் மையம்' என அழைக்கப்படுகிறது. இது உலகின் இரண்டாவது
பெரிய தீவு நாடு. பரப்பளவு 5,92,800 சதுர கி.மீ. 1960 ஜூன் 26ல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. மக்கள்தொகை 2.48 கோடி. உலகில் அதிகமாக கிராம்பு, நவரத்தினங்கள் இங்கு கிடைக்கின்றன.

Advertisement