போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீச்சு; காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது

சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மீது மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதியன்று பாட்டியாலாவின் பாட்ஷாபூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மீதும், ஏப்ரல் 6, 2025 அன்று ஹரியானாவின் அசீம்காரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீதும் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இது தொடர்பாக, காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் பாபர் கல்சா இன்டர்நேஷனல் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது தொடர்பாக காவல்துறை இயக்குநர் ஜெனரல் கவுரவ் யாதவ் கூறியதாவது:
இந்த கைது நடவடிக்கை பாட்டியாலா மற்றும் மாநில சிறப்பு நடவடிக்கை பிரிவு ஆகியவற்றின் தகவல்கள் அடிப்படையில் நடத்தப்பட்டது. கைதான 3 பேரிடம் இருந்து இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கவுரவ் யாதவ் கூறினார்.