குடும்பத் தகராறு 3 பேர் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த குடும்பத் தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருவெண்ணைநல்லுாரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 33; இவரது மனைவி தீபிகா, 30; இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு பிரிந்து வந்த தீபிகா, விழுப்புரம் மருதுாரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

சில நாள்களுக்கு முன் சிவக்குமார், அவரது தந்தை கந்தசாமி ஆகியோர் மருதுாருக்கு வந்து, தீபிகாவை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல பேசினர். அப்போது ஏற்பட்ட தகராறில், இரு குடும்பத்தினரும் தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து, இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், கந்தசாமி, சிவக்குமார், அஸ்வின் ஆகியோர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement