வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை வழங்கல்

திண்டிவனம் : திண்டிவனத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடந்த முகாமை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார்.

முகாமில் 113 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர். இதில், 12 மாற்றுத்திறனாளிகள் உட்பட 617 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

முகாமில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடடேஸ்வரன், திண்டிவனம் சப் கலெக்டர் (பொறுப்பு) ராஜி, மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் பாலமுருகன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி கமிஷனர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement