தோட்டக்கலை துறையில் பழத்தொகுப்பு வழங்கல்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் பழத்தொகுப்பு மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. முகாமிற்கு தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன், ஒன்றிய சேர்மேன் ஓம்சிவ சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிகண்ணன் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பழத் தொகுப்பு மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கி பேசினார். பி.டி.ஓ.,க்கள் பாலகிருஷ்ணன், ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஸ்ரீதர், வீராசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement