ஆசிரியர்களுக்கான குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம் : தமிழக பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குறைகேட்பு முகாம் நடந்தது.

முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், மெட்ரிக் கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் என 19 இடங்களில் நடந்தது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடந்த முகாமில், ஊக்க தொகை பிரச்னை, பென்ஷன் குறைபாடு, தணிக்கை தடை, பணிவரன் முறை உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்ய ஆசிரியர்கள், பணியாளர்கள் மனுக்களாக வழங்கினர். சி.இ.ஓ., அறிவழகன் தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Advertisement