உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்திற்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி : உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய வரும் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்கவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் உத்தரவுக்கிணங்க, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யும் வகையில் வரும் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நியமன பதவிகளுக்கு பெண் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கட்ரமணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், தொடர்புடைய துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தினர், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தமிழுக்கு தினமும் ஒரு 'மலர்' தந்த மகான் டி.வி.ராமசுப்பையர்
-
ஆயிரம் சந்தேகங்கள்: அடுக்குமாடி குடியிருப்பில் பழைய வீடு வாங்குவது லாபமா?
-
வலி நிவாரணிகள் சந்தை மதிப்பு 16,000 கோடி ரூபாயாக உயர்வு
-
மசாலா பொருட்கள் ஏற்றுமதி முதல் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரிப்பு
-
ரகசியத்தை வெளியிட அவகாசம் தேவை தேர்தல் கூட்டணிக்கு சீமான் அச்சாரம்
-
'வெல்லும் தமிழகம்' பெயரில் அர்ஜுன் சம்பத் பிரசார பயணம்