கடம்பூரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

ரிஷிவந்தியம் : கடம்பூரில் அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வாணாபுரம் அடுத்த கடம்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், மணலுார்பேட்டை நகர செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு ஆகியோர் பங்கேற்று அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். முக்கிய தெருக்கள் வழியாக நடந்து சென்று திண்ணை பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ், அரசு இளந்தேவன், ராஜேந்திரன், ராஜாராம், மருத்துவரணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ராமதாஸ், நிர்வாகிகள் சந்திரசேகரன், அருணாச்சலம், மாரிமுத்து, சண்முகம், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement