மின் வாரிய பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் பொறியாளர் அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய மின் ஊழியர் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் ராஜாமணி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஊதிய குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ள ஓய்வூதிய திட்ட சட்ட திருத்தங்களை கைவிடுதல், 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குதல், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மீன்வள பல்கலை கலந்தாய்வு
-
ஜி.பி.எப்., தொகைக்கு 7.1 சதவீத வட்டி அறிவிப்பு
-
தமிழுக்கு தினமும் ஒரு 'மலர்' தந்த மகான் டி.வி.ராமசுப்பையர்
-
ஆயிரம் சந்தேகங்கள்: அடுக்குமாடி குடியிருப்பில் பழைய வீடு வாங்குவது லாபமா?
-
வலி நிவாரணிகள் சந்தை மதிப்பு 16,000 கோடி ரூபாயாக உயர்வு
-
மசாலா பொருட்கள் ஏற்றுமதி முதல் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரிப்பு