தென் ஆப்ரிக்கா அபாரம்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது

ஹராரே: கேப்டன் வான் டெர் துசென், ரூபின் ஹெர்மன் அரைசதம் விளாச தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
ஜிம்பாப்வேயில், முத்தரப்பு 'டி-20' தொடர் நடக்கிறது. நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்க அணிகள் பங்கேற்கின்றன. ஹராரேயில் நடந்த லீக் போட்டியில் ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் (61), ரியான் பர்ல் (36*) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் வான் டெர் துசென் (52), ரூபின் ஹெர்மன் (63) நம்பிக்கை அளித்தனர். தென் ஆப்ரிக்க அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் பைனலுக்குள் நுழைந்தன. மூன்று போட்டியிலும் தோல்வியடைந்த ஜிம்பாப்வே, சொந்த மண்ணில் ஏமாற்றியது.
மேலும்
-
பெண்ணிடம் பணம் பறிப்பு முன்னாள் காதலன் கைது
-
கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிப்பு
-
அடையாறில் நடந்த படகு போட்டி கொழும்பு கிளப் மகளிர் அணி 'சாம்பியன்'
-
சோழிங்கநல்லுார், துரைப்பாக்கத்தில் சாலையில் திடீர் பள்ளத்தால் பீதி
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த கன்டோன்மென்ட் மக்கள் கோரிக்கை
-
கோவிலம்பாக்கம் ரேடியல் சாலையில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்