பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஏமாற்றம்: 'பிரீஸ்டைல்' செஸ் போட்டியில்

லாஸ் வேகாஸ்: 'பிரீஸ்டைல்' செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் தோல்வியடைந்தனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாசில், 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் நடக்கிறது. இதில் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்கின்றனர். இதன் பைனலுக்கு அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமன், லெவான் ஆரோனியன் முன்னேறினர்.

பின், 3-8வது இடங்களுக்கான போட்டியில் விளையாடுவதற்கான 'பிளே-ஆப்' சுற்று நடந்தது. இதன் முதல் போட்டியில் கார்ல்சன் 3-1 என பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். அடுத்து நடந்த 2வது போட்டியில் மீண்டும் அசத்திய கார்ல்சன் 2-0 என, அர்ஜுனை தோற்கடித்தார். இதனையடுத்து கார்ல்சன், 3-4வது இடத்துக்கான போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் விளையாடுகிறார்.
இந்தியாவின் அர்ஜுன், 5-6வது இடத்துக்கான போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ காருணாவை சந்திக்கிறார். தமிழகத்தின் பிரக்ஞானந்தா 7-8வது இடத்துக்கான போட்டியில் அமெரிக்காவின் சோ வெஸ்லியை எதிர்கொள்கிறார்.

Advertisement