உலக செஸ்: அரையிறுதியில் ஹம்பி

பதுமி: உலக கோப்பை செஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி முன்னேறினார்.

ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் யூஜின் சாங் மோதினர். முதல் போட்டியில் ஹம்பி வென்றார். இரண்டாவது போட்டியில் ஹம்பி, கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 53வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஹம்பி 1.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஹரிகா, திவ்யா தேஷ்முக் மோதினர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் ஹரிகா வெள்ளை, திவ்யா கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினர். இப்போட்டி 60வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் போட்டி 1.0 - 1.0 என சமநிலையில் உள்ளது. இன்று 'டை பிரேக்கர்' நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறலாம்.


மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டான் ஜோங்யியிடம் தோல்வியடைந்தார்.

Advertisement