தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்: பழனிசாமி

சென்னை: 'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் உறுதி ஏற்று விட்டனர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் கூறியதாவது:
'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், 31 சட்டசபை தொகுதிகளில், 12.50 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அனைத்து தரப்பினரும், 52 மாத கால, முதல்வர் ஸ்டாலினின் 'பெயிலியர் மாடல்' ஆட்சியில், அவர்கள் சந்தித்து வந்த வேதனைகளை எடுத்துரைத்தனர்.
தி.மு.க., ஆட்சி, பல பொய்களை மட்டுமே கூறி, மக்களை மடைமாற்றம் செய்து, வஞ்சித்து கொண்டிருக்கிறது.
மக்கள் நலனை தள்ளி வைத்துவிட்டு, தமிழகத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே, முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் குறியாக இருக்கின்றனர். அமைச்சர் நேரு, எனது பயணத்தை தவறாக சித்தரித்து, அவதுாறு பரப்பி இருக்கிறார்.
ஆனால், உண்மை என்னவென்றால், அறிக்கை என்ற பெயரில், அமைச்சர் நேருவை விட்டு, ஸ்டாலின் ஆழம் பார்த்துள்ளார். 'மருமகனை காப்போம். மகனை காப்போம்.
ரியல் எஸ்டேட் வாயிலாக தமிழகத்தை கூறு போட்டு விற்போம். போதை பழக்கத்தை பரப்புவோம். இயற்கை வளங்களை சுரண்டுவோம்.
கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்போம். சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்து, ஊழல் பணத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவோம்' என்ற, முதல்வரின் எண்ணத்தை கூறும் விதமாகவே, அமைச்சர் நேருவின் பேச்சு உள்ளது.
ஸ்டாலின் என்ன மடைமாற்றம் செய்தாலும், எனது எழுச்சி பயணம் தொடரும். தவறு செய்த தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும், அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும்
-
வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரம்; ஸ்ரீபெரும்புதுாரில் இளம்பெண் கொலை
-
ரஷ்யாவில் பயிலும் தமிழக மாணவரை போருக்கு அனுப்ப கட்டாய பயிற்சியா; மகனை மீட்க பெற்றோர் கோரிக்கை
-
மீன் வாங்க ஆர்வம்
-
சேவல் சண்டை; 10 பேர் கைது
-
ஆக., முதல் வாரத்தில் எல்.பி.பி.,யில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை முடிவு
-
வைராபாளையத்தில் சாக்கடையாக மாறிய காவிரி பிளாஸ்டிக் கழிவுகளும் தேங்கி கடும் துர்நாற்றம்