3 முக்கிய துறைகளின் ஏற்றுமதி முதல் காலாண்டில் வளர்ச்சி

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் முக்கிய மூன்று துறைகளான மின்னணு, ஆயத்த ஆடைகள் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்., - ஜூன் காலகட்டத்தில், மின்னணு துறை ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரித்து, 1.05 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கான முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, யு.ஏ.இ., மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளன.
இதேபோன்று, ஆயத்த ஆடை ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த 32,725 கோடி ரூபாயைக்காட்டிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 35,615 கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியும் முதல் காலாண்டில் 19.45 சதவீதம் அதிகரித்து, 16,575 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த மூன்று துறைகளிலும் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடாக அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இதன் வாயிலாக, அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நாடாக உள்ளதை பிரதிபலிப்பதாக உள்ளது.
@block_B@
அமெரிக்கா 60.17 சதவீதம்
யு.ஏ.இ., 8.09 சீனா 3.88
நெதர்லாந்து 2.68
ஜெர்மனி 2.09
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி
அமெரிக்கா 34.11 சதவீதம்
பிரிட்டன் 8.81
யு.ஏ.இ., 7.85
ஜெர்மனி 5.51ஸ்பெயின் 5.29
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி
அமெரிக்கா 37.63 சதவீதம்
சீனா 17.26
வியட்நாம் 6.63
ஜப்பான் 4.47
பெல்ஜியம் 3.57block_B
மேலும்
-
கோகுலநாத இந்து மகாஜன பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட்டம்
-
இரட்டிப்பு பணம் தருவதாக 'ஆசை' கூட்டம் போட்ட கும்பல் சுற்றிவளைப்பு
-
'வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்'
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு
-
அரூரில் மாலையில் சாரல் மழை