கட்சி பொதுச்செயலரின் மன்னிப்பு கோரி மல்லை சத்யா உண்ணாவிரதம்
சென்னை: ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். அவர் மீது, கட்சியின் பொதுச்செயலர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
குறிப்பாக, 'என்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றார் என்பதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் கூற முடியாது' என வைகோ பேசியது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தன்னை துரோகி என விமர்சித்த வைகோ, 'அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்' என வலியுறுத்தியும், ம.தி.மு.க., தொண்டர்களிடம் நீதி கேட்டும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மல்லை சத்யா முடிவெடுத்துள்ளார்.
இதற்காக, சென்னையில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், போலீசார் அனுமதி அளித்தனர்.
ஆனால், அங்கு உண்ணாவிரதம் இருந்தால், அதன் அருகிலேயே உள்ள ம.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், வைகோ ஆதரவாளர்கள் குவிக்கப்படுவர்.
அப்போது, தன் ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, வேறு இடத்தில் அனுமதி தருமாறு, போலீசாரிடம் மல்லை சத்யா கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.