ராகுலுக்கு முதிர்ச்சியில்லை மா.கம்யூ., செயலர் ஆவேசம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் அறிக்கை:

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக, மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு, காங்கிரஸ் கட்சிக்குள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்.,யும் சித்தாந்த ரீதியாக, சம அளவில் எதிர்த்து போராடுகிறேன்' என, பேசியிருப்பது, அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement